கூடலூர் அரசு பேருந்து நிலையத்தில் 2ம் கட்ட விரிவாக்க பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை

 

கூடலூர், ஜூலை 22: கூடலூரில் நகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தின் முதல் கட்டப்பணிகளான பனிமனை மற்றும் பயணிகள் காத்திருக்கும் அறைகள் ஆகியவற்றின் பணிகள் முடிவடைந்துள்ளன. பழைய பேருந்து நிலையத்தின் முன் பகுதியில் சாலை ஓரத்தில் உள்ள காம்பவுண்ட் சுவர்களை அகற்றும் பணிகள், பனிமனைக்குள் பேருந்துகள் செல்லும் வழி மற்றும் பிரதான சாலைக்கு பேருந்துகள் வந்து செல்லும் வழி ஆகிய இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. இப்பணிகள் முடிவடைந்தால் புதிய பேருந்து நிலையம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்துவிடும்.

புதிய பேருந்து நிலைய இரண்டாம் கட்ட விரிவாக பணிகள் குறித்து கூடலூர் நகர மன்ற தலைவர் மற்றும் நகராட்சி பொறியாளர் ஆகியோரிடம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக உதகை மண்டல பொது மேலாளர் நடராஜன், சிவில் துனை மேலாளர் மணிவாசகம், கூடலூர் கிளை மேலாளர் அருள் கண்ணன் மற்றும் நீலகிரி மண்டல பொதுச் செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் சந்தித்து பேசினர். இரண்டாம் கட்ட பணிகளை விரைந்து முடித்து பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் நகராட்சி அலுவலர்களிடம் தெரிவித்தனர்.

The post கூடலூர் அரசு பேருந்து நிலையத்தில் 2ம் கட்ட விரிவாக்க பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: