கும்பகோணம் அருகே திருநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: இன்று நடக்கிறது

கும்பகோணம், ஜூலை 31: கும்பகோணம் அருகே திருநல்லூரில் வரும் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார் மற்றும் ஆனந்தராஜ் ஆகியோர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது, பொதுமக்கள் இணையவழி வாயிலாக தற்போது பெற்று வரும் சேவைகளை விரைவாகவும், பல்வேறு துறைகள் மூலம் பெற்றுவரும் வெவ்வேறு சேவைகளை ஒரே இடத்திலும் பெறுவதற்கு தமிழக முதலமைச்சரின் சீரிய வழிகாட்டுதலின்படி ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தின் முகாம் இன்று கும்பகோணம் வட்டாரத்தில் உள்ள திருநல்லூர், நீரத்தநல்லூர், அகராத்தூர், அத்தியூர், தேவனாஞ்சேரி மற்றும் உத்தமதாணி ஆகிய 6 ஊராட்சிகளின் சார்பாக திருநல்லூர் மகாலெட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

எனவே திருநல்லூர், நீரத்தநல்லூர், அகராத்தூர், அத்தியூர், தேவனாஞ்சேரி மற்றும் உத்தமதாணி ஊராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் மக்களுடன் முதல்வர் முகாமில் கலந்துகொண்டு ஊரக வளர்ச்சித்துறை மூலம் குடிநீர் வசதி, வீட்டு வரி, கடை உரிமம், குழுக்கடன், வருவாய்த்துறை மூலம் நில அளவை, பட்டா மாறுதல், மருத்துவத்துறை மூலம் முதலமைச்சர் விரிவான காப்பீட்டு அட்டை, தொழிலாளர் நல வாரிய அட்டை மற்றும் சமூக நலத்துறை, மின்சார துறை, ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை தொடர்பான கோரிக்கைகளுக்கும் நிவாரணம் பெறலாம்.

The post கும்பகோணம் அருகே திருநல்லூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: