குமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி தாமதம் ஏன்?

கன்னியாகுமரி:  கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணிக்கு போதிய நிதி ஒதுக்கப்படாததால் பணிகள் மந்த நிலையில் நடக்கப்படுவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சுமார் 85 கி.மீட்டர் தூரம் கொண்ட கன்னியாகுமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ரூ.1437 கோடி செலவில் அடுத்த 4 ஆண்டுகளில் பணிகளை முடிக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டன. ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை 30 விழுக்காடு பணிகளே முடித்திருப்பதாக குற்றச்சாட்டும் ரயில் பயணிகள் நில ஆர்ஜிதம் செய்வதற்கு தேவையான நிதியை ரயில்வேத்துறை உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த திட்டத்திற்கு  இரு மாநிலங்களிலும் மேலும் சுமார் 150 ஏக்கர் கையக படுத்த வேண்டியது இருக்கிறது. அத்துடன் மிகப்பெரிய பாலங்கள் 70-ம் சிறிய பாலங்கள் 600 முதல் 700 வரை கட்டப்பட வேண்டியது இருக்கிறது.  இந்த பணிகளுக்கு தற்போது மேலும் ரூ.1000 கோடி தேவைப்படுகிறது. இந்த நிதியை ஒதுக்கீடு செய்தால் தான் எஞ்சிய பணிகளை விரைந்து முடிக்க முடியும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுவதாக ரயில் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்….

The post குமரி- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணி தாமதம் ஏன்? appeared first on Dinakaran.

Related Stories: