குமரியில்160 பேர் கொண்ட பறக்கும்படை

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வை கண்காணிக்க 160 பேர் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் மட்டும் நிலையான பறக்கும்படையினர் 56 பேரும், பறக்கும்படையினர் 24 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனை போன்றே நாகர்கோவில் கல்வி மாவட்டத்திற்கும் பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இதனை போன்று முதன்மை கல்வி அலுவலர் தலைமையிலும் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் விபத்து அல்லது அசம்பாவிதம் நேர்ந்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் தீயணைப்பு துறையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. வினாத்தாள் எடுத்து செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளை கட்ட நேரிட்டால் சுங்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க செய்தல், மாணவர்களுக்கு போதிய பேருந்து வசதி, தேர்வு மையங்களில் முதலுதவி ஏற்பாடுகள், வினாத்தாள் பாதுகாக்கப்படும் பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன….

The post குமரியில்160 பேர் கொண்ட பறக்கும்படை appeared first on Dinakaran.

Related Stories: