குன்னூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு

 

குன்னூர்,மே19: குன்னூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. மலை ரயிலில் முன்பதிவு செய்து சுற்றுலா பயணிகள் பயணித்து வருகின்றனர். மலை ரயிலில் பயணிக்க உள்நாடு மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் ரயில் நிலையம் வரை காலை மற்றும் மாலை நேரம் என இரு முறை இயக்கப்படும். குன்னூர் ஊட்டி இடையே ஐந்து முறையும் கோடை சீசன் காலங்களில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் அதிகம் வரக்கூடிய நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவ்வப்போது அதிகாரிகள் சிறப்பு மலை ரயில் மூலம் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து சிறப்பு மலை ரயில் மூலம் தலைமை முதன்மை பொறியாளர் கௌதம் தத்தா குன்னூர் ரயில் நிலையம் வந்தார். குன்னூரில் உள்ள பணிமனையில் ஆய்வுகள் மேற்கொண்டு ஊழியர்களிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.ரயில் பெட்டியில் அவசர காலங்களில் வெளியேறும் முறைகளை கேட்டறிந்தார்.பர்னஸ் ஆயில் மூலம் இயக்கப்பட்டு வந்த என்ஜின்கள் டீசல் என்ஜிகளாக மாற்றப்பட்டுள்ளதை ஆய்வு செய்த அவர் தொடர்ந்து மீதமுள்ள பர்னஸ் ஆயில் என்ஜின்களை டீசல் என்ஜிகளாக மாற்ற உத்தரவிட்டு சென்றார்.

The post குன்னூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே முதன்மை தலைமை பொறியாளர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: