8 வழிச்சாலை திட்டம்: சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய அறிக்கை பெறப்படவில்லை...உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல்

சென்னை: சென்னை-சேலம் இடையேயான 8 வழிச்சாலை திட்டத்துக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றிய அறிக்கை பெறப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் நெடுஞ்சாலைத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 8 வழிச்சாலைக்கு எதிரான பல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற சுற்றுச்சூழல் ஆய்வின்றி நிலம் கையகப்படுத்துவதால் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை கோரிய வழக்கில்  வனம், சுற்றுச்சூழல் பாதிப்பு அறிக்கை பெறப்படவில்லை என மனுதாரர் வாதாடினார்.

இதற்கு பதிலளித்த 8 வழிச்சாலை திட்ட இயக்குநர் மோகன்,சாலைக்கான நிலஅளவை பணிகளை முடிக்காமல் சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி ஆய்வு மேற்கொள்ள முடியாது என்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பாக வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவே சேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும்  

இத்திட்டத்தால் ரூ.700 கோடி எரிபொருள் மிச்சப்படும், அவசர காலங்களில் திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்ட மக்கள் சென்னை செல்ல உதவும் என்று தெரிவித்தார். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த நில உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: