தர்மபுரி, செப்.10: தர்மபுரி மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும், போலீசாரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று நல்லம்பள்ளி தாலுகா, இண்டூர் அருகே ராமர்கூடல், மாரியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, 10க்கும் மேற்பட்ட பெட்டிக்கடை மற்றும் மளிகை கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் கந்தசாமி தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர் சரண்குமார், இண்டூர் போலீஸ் எஸ்எஸ்ஐ சின்னசாமி மற்றும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் 2 மளிகை கடைகளில், தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்தது கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்த 2 கடை உரிமையாளர்களுக்கு தலா ₹25ஆயிரம் வீதம் அபராதம் விதித்து, 2 கடைகளையும் பூட்டி சீல் வைத்தனர்.
The post குட்கா விற்ற 2 கடைக்கு சீல் appeared first on Dinakaran.