திருமணத்திற்கு மறுத்ததால் மிரட்டல்: மாணவியின் நிர்வாண போட்டோவை தந்தைக்கு அனுப்பிய மாணவர் கைது

கோவை: கோவை குனியமுத்தூரை சேர்ந்த 22 வயது இளம்ெபண் ஒருவர் ஒசூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.இ. 3ம் ஆண்டு படித்து வந்தார். இதே  கல்லூரியில் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் 8-வது தெருவை சேர்ந்த தேவேஷ்வர் (22) என்பவரும் 3ம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் விடுதியில்  தங்கியிருந்தனர். மாணவிக்கும் இவருக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்தனர். பல்வேறு இடங்களுக்கு இவர்கள் சென்று  வந்துள்ளதாக தெரிகிறது.  இதனால், அவர்கள் செல்பி போட்டோக்களை அதிகளவு எடுத்துள்ளனர். இந்தநிலையில், கொரோனா நோய் பரவல்  காரணமாக கல்லூரி மூடப்பட்டது. மாணவி குனியமுத்தூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்து விட்டார். தேவேஷ்வர் தூத்துக்குடி சென்று விட்டார்.

அப்போதும் இருவரும் வீடியோ கால் மூலமாக அடிக்கடி பேசி வந்தனர். இருவரும் காதலிக்கும் விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.  உடனே, மகளை கண்டித்துள்ளனர். மாணவியும் அவருடன் பேசுவதை நிறுத்தி உள்ளார். ஆனால், தேவேஷ்வரோ ‘‘நீ நிர்வாணமாக இருக்கும்  போட்டோக்களும் என்னிடம் இருக்கிறது.அதை பேஸ்புக், வாட்ஸ்அப்பில் பரப்பி விடுவேன். என்னை ஏமாற்றினால் நீ வாழ முடியாது’’ என  மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலுக்கும் மாணவி கவலைப்படவில்லை. இதனால், கோபத்தில் இருந்த தேவேஷ்வர் நிர்வாண போட்ேடாக்களை அவரது  தந்தையின் செல்போன் வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வைத்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் மாணவியிடம் போட்டோ விவரம்  குறித்து விசாரித்தனர். அப்போது, விடுதியில் குளிக்கும்போது படங்களை செல்போனில் மாணவி எடுத்துள்ளார்.

இதை அவருக்கு தெரியாமல் தேவேஷ்வர் தனது செல்போனுக்கு மாற்றி உள்ளார். இதைவைத்து மாணவியை மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதையடுத்து, மாணவி திருமணம் செய்ய சம்மதம் எனக்கூறி தேவேஷ்வரை கோவைக்கு வரவழைத்தார். முன்னதாக அவர் மீது குனியமுத்தூர்  போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன்படி மறைந்திருந்த போலீசார், தேவேஷ்வர் வந்ததும் கைது செய்தனர். இவர் மீது பெண்கள் வன்கொடுமை  மற்றும் ஆபாச படங்கள் அனுப்பி மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: