காரைக்குடியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு

காரைக்குடி, ஆக. 9: காரைக்குடி செக்காலைரோட்டில் ராம்ராஜ் காட்டன் விரிவுபடுத்தப்பட்ட ஷோரூம் திறப்பு விழா நடந்தது. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் மற்றும் தலைவர் கேஆர்.நாகராஜன் வாழ்த்தினார். நகராட்சி சேர்மன் எஸ்.முத்துத்துரை விரிவுபடுத்தப்பட்ட ஷோரூமை திறந்து வைத்தார். முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சுப்பையா, தொழில்வணிகக்கழக செயற்குழு உறுப்பினர் பிராட்லா முதல்விற்பனையை துவக்கிவைத்தனர்.

ராம்ராஜ் காட்டன் நிறுவனம் மதிப்பிற்குரியவர்களுகு என்ற முத்திரையுடன் கம்பீரமாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. தென்மாநிலம் முழுவதும் வெண்மை நிற ஆடைகளை உற்பத்தி செய்து விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களிலும் தனது ஷோரூம்களை திறந்துவைத்து வெற்றி கண்டுள்ளது. ராம்ராஜ் காட்டன் உற்பத்தி செய்யும் அனைத்து ரகங்களும் மிருதுவான பருத்தி நூலிழைகளை கொண்டு தயார் செய்யப்பட்டது.

வேட்டிகள், சர்ட்டுகள், பனியன்கள் தயாரித்து தென்னிந்தியா முழுவதும் மட்டுமல்லாது வடமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே வேட்டிக்கு என தனி முத்திரை பதித்து முதலிடத்தில் உள்ள ஒரே நிறுவனம். தென்னிந்தியாவில் உள்ள முக்கிய நகரங்கள், விமான நிலையங்களில் ஷோரூம்கள் திறப்பட உள்ளது. நகர்மன்ற உறுப்பினர் கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post காரைக்குடியில் ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: