காஞ்சிபுரம் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகளை மீண்டும், உண்டு உறைவிட பள்ளியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பங்கேற்றார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டில் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகள் கண்டறிந்து, மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான மூன்றடுக்கு அமைப்பு கொண்ட 3 குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில், மாவட்ட குழுவின் கலந்தாலோசனை ஜூலை மாத கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட குழுவில் உள்ள அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டனர். அப்போது, பள்ளி செல்லா இடைநின்ற குழந்தைகள் மீண்டும் பள்ளியில் சேர்க்க மாவட்ட குழு உறுப்பினர்கள், கல்வித்துறைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறும், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறையை முழுமையாக அகற்ற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென்று கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

The post காஞ்சிபுரம் உண்டு உறைவிட பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: