காங்கயத்தில் இன்று கைப்பந்து போட்டி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைக்கிறார்

 

காங்கயம் ஜன.13: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, காங்கயத்தில் இன்று (13ம்தேதி) கைப்பந்து போட்டியை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைக்கிறார். திமுக காங்கயம் நகர மாணவரணி, காங்கயம் வாலிபால் பாய்ஸ் அமைப்பு ஆகியன இணைந்து நடத்தும் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி காங்கயம் நகரம்,திருப்பூர் சாலை பகுதியில் உள்ள எம்.பி.எம்.நகரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் நடைபெறுகிறது. இப்போட்டிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி 4 ஆம் மண்டலக் குழு தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டு, போட்டிகளைத் துவக்கி வைக்கின்றனர்.

போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரமும் 2 ஆம் பரிசாக ரூ.10 ஆயிரமும் 3 ஆம் பரிசசாக ரூ.7,500, 4 ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மது அருந்திவிட்டு விளையாடுவதற்கு அனுமதி இல்லை, ஒரு அணியின் வீரர் மறு அணியில் விளையாட அனுமதி இல்லை என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விளையாட்டு வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை காங்கயம் நகர திமுக மாணவரணி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post காங்கயத்தில் இன்று கைப்பந்து போட்டி அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைக்கிறார் appeared first on Dinakaran.

Related Stories: