கலைஞர் நூற்றாண்டு விழா: மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

திருவாரூர், ஆக. 17: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நாளை மறுதினம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் நடைபெறுவதாக கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை மறுதினம் (19ம் தேதி) காலை 9.30 மணியளவில் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உள்ள வெளிநோயாளிகள் பிரிவில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் திருவாரூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பெறாத நபர்கள், தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைக்காகவும், அரசின் திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் தேவைப்படுவோர்களும் கலந்துகொண்டு பயன்பெற ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இம்முகாமில் ஏற்கனவே அடையாள அட்டை பெற்றவர்கள் மாற்றுத்திறனாளி அடையாளஅட்டை (மருத்துவ சான்று உட்பட) அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை, குடும்ப அட்டை அசல் மற்றும் நகல், சமீபத்திய பாஸ்போட் அளவு புகைப்படம் -4 ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

The post கலைஞர் நூற்றாண்டு விழா: மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: