கரூரில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம்

கரூர், பிப். 13: கரூர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.கரூர் தாந்தோணிமலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி செயலாளர் சேகர் தலைமை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியன், மாவட்ட நிர்வாகிகள் சின்னையன், முன்னாள் நகர தலைவர் சுப்பன் மற்றும் செந்தில்குமார், காமராஜ், செல்வராஜ் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.வரும் பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. இந்த மாத இறுதியில் தமிழகம் வரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது.

கரூர் பாராளுமன்ற தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமான முன்னாள் மாவட்ட தலைவர் பேங்க் சுப்பிரமணியனுக்கு சீட் வழங்க வேண்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மற்றும் தமிழக காங்கிரஸ் கட்சியை இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post கரூரில் பாராளுமன்ற தேர்தல் சம்பந்தமான காங்கிரஸ் கட்சி ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: