சேலம், ஜன.18: சேலம் சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் (27). இவர் கடந்த திங்கள்கிழமை டூவீலரில் அதே பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சன்னியாசிகுண்டு பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (39) கடம்பூர் முனியப்பன்கோவில் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் (31) புது சுண்ணாம்பு சூளையை சேர்ந்த சம்பத்குமார் (39) மணிகண்டன் (27) ஆகியோர் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். மேலும் அங்கு கிடந்த செங்கல் மற்றும் கட்டையால் தாக்கி லோகேசை காயப்படுத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரது டூவீலரை பறித்ததுடன் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர். இவர்கள் தாக்கியதில் காயம் அடைந்த லோகேஷ், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரகலா வழக்கு பதிவு செய்து ஹரிகிருஷ்ணன், ஈஸ்வரன், சம்பத்குமார், மணிகண்டன் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
The post கத்திமுனையில் டூவீலர் பறித்த 4பேர் கைது appeared first on Dinakaran.