கட்டாய மதமாற்ற தடை மாநிலங்களுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி:  உத்தரப்பிரதேச மாநிலத்தில் திருமணத்திற்காக கட்டாய மத மாற்றம் செய்வதற்கு தண்டனை வழங்க வகை செய்யும் அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு செய்பவர்களைத ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப் பிரிவின் கீழ் கைது செய்து ஐந்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கவும், சுமார் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் உட்பட பாஜ ஆளும் சில மாநிலங்ககளிலும் கட்டாய மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினர் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த ஏற்ற தலைமை நீதிபதி, ‘‘நான்கு வாரத்திற்கு பின்னர் தான் விசாரணை நடத்த முடியும். இருப்பினும் அவசர சட்டத்தை கொண்டு வந்த மாநிலங்கள் அதுகுறித்து பதிலளிக்க நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்புகிறது’’ என உத்தரவிட்டார்….

The post கட்டாய மதமாற்ற தடை மாநிலங்களுக்கு நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: