ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்

 

உசிலம்பட்டி, ஜூலை 5: உசிலம்பட்டியில் அரசு ஊழியர் சங்க கட்டிட அலுவலகத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க வட்டக்கிளை பேரவை கூட்டம் நடைபெற்றது. வட்டக்கிளை தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். வட்டக் கிளை இணைச் செயலாளர்கள் பழனி, அக்கினி, பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டக்கிளை செயலாளர் மகேஸ்வரன் வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் ஜெயராமன், வட்டக்கிளை பொருளாளர்கள் முத்துசாமி, அய்யங்காளை ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

இக்கூட்டத்தில் ஓய்வுபெற்ற சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9000 வழங்க வேண்டும், 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் ஆழ்வார் நன்றி கூறினார்.

The post ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: