ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம்

மதுரை, பிப். 4: மதுரை சரக போக்குவரத்து இணை கமிஷனர் சத்தியநாரயணன் வழிகாட்டுதலின் படி நேற்று 20 வது நாளாக சாலைபாதுகாப்பு மாதத்தில் இலவச பொது மருத்துவ முகாம் வண்டியூர் சுங்கச்சாவடியில் நடத்தப்பட்டது. இம்முகாமினை மதுரை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சித்ரா தலைமையில் மதுரை வேலம்மாள் மருத்துமனை மருத்துவ குழுவினரால் இம்முகாம் நடத்தப்பட்டது. முகாமில் தனியார், மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள், மற்றும் பொதுமக்கள் பயனடையும் விதமாக வண்டியூர் சுங்கச்சாவடி வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள் ஆகியோருக்காக பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. பொதுமருத்துவத்தில் சுமார் 300 நபர்கள் கலந்து கொண்டனர். இம்மருத்துவ முகாமில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் உலகநாதன். முரளி, சரவணக்குமார், செல்வம், சம்பத்குமார். சுகந்தி, மனோகரன் ஆகியோர் இணைந்து மதுரை மாவட்டத்தில் ‘‘தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்” விழாவினை நேற்று பொதுமக்களுடன் இணைந்து கொண்டாடினர்.

The post ஓட்டுநர்களுக்கு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.

Related Stories: