ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தால் மாநிலங்களவையில் சுமார் 50 மணி நேரம் வீண்!: வெங்கய்ய நாயுடு

டெல்லி: ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளின் பிடிவாத போக்கு காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் செயல்பாடு, நேரம், பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. சுமார் 50 மணி நேரம் வீணடிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியிருக்கிறார். நவம்பர் 29ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை முடிவதாக இருந்த நிலையில், இன்றே முடித்துக்கொள்ளப்பட்டு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தொடர் நடைபெற்ற 24 நாட்களில் 18 அமர்வுகள் மட்டுமே நடைபெற்றிருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்திருக்கிறார். மக்களவையின் செயல்பாடு திறன், 82 விழுக்காடாக இருந்த நிலையில், மாநிலங்களவையின் செயல்பாட்டு திறன் பாதிக்கும் குறைவாக அதாவது, 47 சதவிகிதம் மட்டுமே இருந்திருக்கிறது. சுமார் 50 மணி நேரம் வீணடிக்கப்பட்டிருப்பதாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் செயல்பாட்டு நேரம் வீணானதன் காரணமாக கோடிக்கணக்கான பணமும் விரையமாகியுள்ளது. மக்களவையில் 11 மசோதாக்களும், மாநிலங்களையில் 9 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மக்களவையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடைபெற்ற விவாதம், 12 மணி நேரம் 26 நிமிடங்கள் நடைபெற்றதாகவும் இதில் 99 எம்.பி.க்கள் பங்கேற்று பேசியதாகவும் சபாநாயகர் ஓம்.பிர்லா தெரிவித்திருக்கிறார். …

The post ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகளின் பிடிவாதத்தால் மாநிலங்களவையில் சுமார் 50 மணி நேரம் வீண்!: வெங்கய்ய நாயுடு appeared first on Dinakaran.

Related Stories: