ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் டிஏ உயர்வை வழங்க நிதியமைச்சகம் உத்தரவு

புதுடெல்லி: கொரோனா பரவலை தொடர்ந்து ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு கடந்தாண்டு ஜனவரி முதல், ஜூலை 1, 2021 வரையிலான அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரண தொகை உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 11 சதவீதம் அதிகரித்து 28 சதவீதமாக அளிக்கவும் இதனை ஜூலை 1ம் தேதி முதல் வழங்கவும் கடந்த 14ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்நிலையில், நிதியமைச்சக்கத்தின் கீழ் செயல்படும் செலவினங்கள் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், `ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை இந்த மாதம் 1ம் தேதி முதல் வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு ஜனவரி முதல் நடப்பாண்டு ஜனவரி 1, 2021 வரையிலான 3 கூடுதல் தவணைகளும் இதில் அடங்கும். பாதுகாப்பு சேவை மதிப்பீட்டுகளின் அடிப்படையில் பொது சேவை ஊழியர்களுக்கும் இது பொருந்தும். ஆயுதப்படை போலீசார், ரயில்வே ஊழியர்களுக்கு அந்தந்த துறைகளின் உத்தரவு மூலம் அறிவிக்கப்படும்,’’ என்று கூறப்பட்டுள்ளது….

The post ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் டிஏ உயர்வை வழங்க நிதியமைச்சகம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: