ஊட்டியில் 498வது மலைச்சாரல் கவியரங்கம்

ஊட்டி,ஏப்.4: நீலகிரி மாவட்ட தமிழ் கவிஞர்கள் சங்கத்தின் சார்பில் மாதந்தோறும் ஊட்டியில் கவியரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இம்மாதத்திற்கான 498வது மலைச்சாரல் கவியரங்கம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடந்தது.இதற்கு செயலர் பிரபு முன்னிலை வகித்தார்.தலைவர் பெள்ளி தலைமை வகித்தார். கவியரங்கில் கவிஞர் சுந்தரபாண்டியன் வரவேற்றார். இக்கவியரங்கில் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை சேர்ப்பதுடன், இளம் கவிஞர்களை ஊக்குவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு திர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் விரைவில் வெளியிடப்பட உள்ள கவிதை நூல் குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் கவிஞர்கள் ஜனார்த்தனன்,நீலமலை ேஜபி., ரமேஷ்ராஜா, சுந்தரபாண்டியன், சமன்குமார்,ஜமிலா பேகம்,வாசமல்லி,மதிமாறன், மாரியப்பன் ஆகியோர் ஊட்டி – 200 உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கவிதைகள் பாடினர். முடிவில் அட்சிதா நன்றி கூறினார்.

The post ஊட்டியில் 498வது மலைச்சாரல் கவியரங்கம் appeared first on Dinakaran.

Related Stories: