ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள சிறுதானியங்களான கேழ்வரகு, சாமை, திணையை உணவாக எடுத்து கொள்ளலாம்: சித்த மருத்துவர்கள் ‘‘டிப்ஸ்’’

 

தொண்டி, ஜூலை 8: இயற்கையான வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரித்து, கொரோனா உள்பட பல்வேறு கிருமி தொற்றுகளில் இருந்து எளிதாக விடுபட்டு பொதுமக்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கையான வாழ்வியல் மற்றும் உணவு முறைகள் குறித்து சித்த மருத்துவர்கள் கூறியதாவது, ‘‘சிறு தானியங்களான கேழ்வரகு, சாமை, திணை, வரகு, குதிரைவாலியை உணவாக எடுத்து கொள்ளலாம்.

கசப்பு சுவை உள்ள சுண்டைக்காய், பாகற்காய்யை உணவில் சேர்க்க வேண்டும். வேப்பம்பூ, தூதுவளை ரசம் செய்து சாப்பிடலாம். நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற வைட்டமின் ‘சி’ கொண்ட பழங்களை தினம் உணவாக சேர்த்து கொள்ள வேண்டும். பயறு வகைகளான ஜிங்க் சத்துள்ள நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, கொண்டை கடலையை மாலையில் சாப்பிடலாம்.

தினம் காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்கு பிறகு 15- 20 நிமிடம் வெயிலில் காய்தல் நல்லது. இது உடம்பிற்கு மிகவும் நல்ல பலன் தரும். இந்த வாழ்வியல் மற்றும் உணவு முறைகளை பொதுமக்கள் தினம் கடைபிடித்து வர வேண்டும். இந்த சித்த மருத்துவத்தை தொடர்ந்து குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பினரும் கடைபிடித்து வந்தால் நோய் தொற்றுகளில் இருந்து வருமுன் தடுத்து தங்களை தற்காத்து கொள்ளலாம். பக்கவிளைவுகள் இல்லாதது. நோய் பாதிப்பு வந்தாலும் விரைவில் எளிதாக குணமடைந்து ஆரோக்கியமாக பெறலாம்’’ என தெரிவித்துள்ளனர்.

The post ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ள சிறுதானியங்களான கேழ்வரகு, சாமை, திணையை உணவாக எடுத்து கொள்ளலாம்: சித்த மருத்துவர்கள் ‘‘டிப்ஸ்’’ appeared first on Dinakaran.

Related Stories: