இலவச வீட்டுமனை பட்டாவிற்கு நிலம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம்

 

திருப்பூர், செப்.24: திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட கிராமப்புற பகுதிகளில் சொந்தமாக வீடோ, நிலமோ இல்லாத பிற்படுத்தப்பட்டோர்,மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழு தனியார் நில உரிமையாளருடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தி நிலம் கிரையம் செய்யப்பட்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மேற்கண்ட இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் பொருட்டு நில எடுப்பு மேற்கொள்ள 2024-2025 ம் நிதி ஆண்டுற்கு ரூ.1.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.மேற்படி இலவச வீட்டு மனைப்பட்டாவிற்கு நிலம் வழங்க விருப்பமுள்ள நில உடைமையாளர்கள் உரிய ஆவணங்களுடன் மாவட்ட கலெக்டர் அல்லது திருப்பூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் (அறை எண்.115 ல் முதல் தளத்தில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post இலவச வீட்டுமனை பட்டாவிற்கு நிலம் வழங்க விருப்பம் உள்ளவர்கள் தெரிவிக்கலாம் appeared first on Dinakaran.

Related Stories: