சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். மேலும் தென்மேற்கு பருவமழை வலுபெற்றுள்ளதால் கோவை வால்பாறை, நீலகிரி, தேனியில் மழை பெய்து வருவதாக பாலச்சந்திரன் கூறினார்.