இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ₹67 லட்சம் நிதி உதவி

தர்மபுரி, ஏப்.7: பெரியார் பல்கலைக்கழக பேராசிரியரின் ஆராய்ச்சிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ₹67 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளது. அதற்கு துணைவேந்தர் பாராட்டு தெரிவித்தார். தர்மபுரி பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய உயிர் தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியர் காமராஜ், மலேரியா பரப்பும் கொசுக்கள் மீதான பல்வேறு பருவ கால மற்றும் புவியியல் மாறுபாடுகளின் விளைவுகள் பற்றிய ஆராய்ச்சியை மேம்படுத்த மத்திய அரசின் கீழ் செயல்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் சார்பில் ₹67 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் இவ்வாராய்ச்சி நிதி நிலையை பெற்றுள்ள பேராசிரியர் காமராஜை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் மற்றும் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) மோகனசுந்தரம், மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

The post இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ₹67 லட்சம் நிதி உதவி appeared first on Dinakaran.

Related Stories: