இந்தியாவில் 48 பேரும், தமிழகத்தில் 9 பேருக்கும் இதுவரை டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் எஸ்.கே.சிங் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 45,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 48 பேருக்கு இதுவரை டெல்டா ப்ளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா இரண்டாம் அலையிலிருந்து தமிழகம் மெல்ல மீண்டு வரும் நிலையில் தற்போது டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் ஏற்பட்ட இரண்டாம் அலையால் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிய நிலையில் தற்போது 50 ஆயிரமாக குறைந்துள்ளது. இந்நிலையில் டெல்டா வகை கொரோனாவிலேயே திரிபடைந்த டெல்டா ப்ளஸ் வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் அடுத்த அலை டெல்டா ப்ளஸ் தொற்றால் ஏற்படலாம் என கூறப்படும் நிலையில் இந்தியாவில் மொத்தமாக 48 பேருக்கு டெல்டா ப்ளஸ் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் வகைகளில் ஒன்றான டெல்டா பிளஸ் வகை கொரோனா வைரஸால் இந்தியாவில் மகாராஷ்டிரம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுகுறித்து தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குநர் எஸ்.கே.சிங் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது; நாடு முழுவதும் 45,000 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 48 பேர் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 20 பேர், தமிழகத்தில் 9 பேர், மத்தியப் பிரதேசத்தில் 7 பேர், கேரளத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும்,பஞ்சாப், குஜராத்தில் தலா 2 பேருக்கும், ஜம்மு-காஷ்மீர், கர்நாடகம், ராஜஸ்தான், ஒடிசா, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருவருக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது….

The post இந்தியாவில் 48 பேரும், தமிழகத்தில் 9 பேருக்கும் இதுவரை டெல்டா ப்ளஸ் கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Related Stories: