வாஷிங்டன்: இந்தியாவில் கடந்த ஆகஸ்டில் அடையாளம் காணப்பட்ட வைரசின் உருமாறிய ‘எக்ஸ்பிபி 1.5’ வைரஸ் அமெரிக்காவில் வேகமாக பரவிவருகிறது என்று நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஓராண்டாக குறைந்திருந்த நிலையில், தற்போது சீனாவில் ஒமிக்ரான் குடும்பத்தை சேர்ந்த உருமாறிய புதியவகை கொரோனா பிஎஃப் 7 வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் பிஎஃப் 7, கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளதால் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளில் 53 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அமெரிக்காவின் 10 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒமிக்ரான் பி.ஏ.2 என்ற உருமாறிய வைரசின் துணை வைரசான ‘எக்ஸ்பிபி 1.5’ என்ற தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பில் 44.11 சதவீதத்திற்கும் அதிகமானோர் ‘எக்ஸ்.பி.பி.1.5’ வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். எக்ஸ்பிபி வகையை சேர்ந்த வைரஸ் தொற்றானது முதன்முதலில் கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டது. தற்போது இந்த வைரசின் உருமாறிய வைரஸ், அமெரிக்காவிலும் சிங்கப்பூரிலும் பரவி வருகிறது. ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக வைராலஜிஸ்ட் ஆண்ட்ரூ பெகோஸ் கருத்துபடி, எக்ஸ்பிபி.1.5 வைரசானது, அதன் குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்றும், கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். தொற்று பரவலை கட்டுப்பட்டுத்த ஆன்டிபாடி தடுப்பூசி போட்டாலும் கூட, எக்ஸ்பிபி 1.5 வைரசானது மிகவும் ஆபத்தானது’ என்று அந்த ஆய்வறிக்கையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்….
The post இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட நிலையில் அமெரிக்காவில் வேகமாக பரவும் ‘எக்ஸ்பிபி 1.5’ வைரஸ்: நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை appeared first on Dinakaran.