கடல் சீற்றம் காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

ராமேஸ்வரம்: பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடல் சீற்றம் காரணமாக மறு அறிவிப்பு வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடந்த 6 நாட்களுக்கு மேலாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் 1200 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 5000 மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கடந்த வாரம் இலங்கையில் உள்ள படகுகளை மீட்க வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மீனவர்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கடந்த சில நாட்களாக வேலைக்கு சென்ற நிலையில் இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: