ஆருத்ரா நிறுவன இயக்குநர்களின் 70 வங்கிக் கணக்குகள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை

சென்னை: ஆருத்ரா கோல்ட் டிரேடிங் நிறுவனம் மற்றும் இயக்குனரின் சுமார் 70 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கியுள்ளனர். அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்கள்ளிடம் பணம் மோசடியில் ஈடுபட்டதாக கடந்த மே மாதம் 24ம் தேதி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தமிழகம் முழுவதும் உள்ள ஆருத்ரா நிதி நிறுவனத்தின் 26 இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தினர். இதில் கணக்கில் கட்டப்படாத ரூ. 3.41 கோடி பறிமுதல் செய்த காவல் துறையினர். 11 வங்கிக்கணக்குகளை முடக்கி உள்ளார். ஆருத்ரா நிதி நிறுவனத்தின் இயக்குனர்கள் 14 பேர் மீதும் ஆருத்ரா பெயரில் செய்யப்பட்டு வரும் 5 நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தனர். அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் பாஸ்கர் மற்றும் மோகன் பாபு ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றபேரை காவல்துறையினர் தேடிவருகின்றனர். இந்நிலையில் ஆருத்ரா நிதி நிறுவனத்தின் 70 வங்கிக்கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் முடக்கம் செய்துருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை அதிகாரியாக பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி. ஜெயச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். …

The post ஆருத்ரா நிறுவன இயக்குநர்களின் 70 வங்கிக் கணக்குகள் முடக்கம்: பொருளாதார குற்றப்பிரிவு நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: