ஆந்திர வாக்காளர் பட்டியலிலும் பெயர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தம்பதி வேட்புமனு நிராகரிப்பு

பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு,அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகளாக 59 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பசுபதி தலைமையில் நேற்று நடந்தது.  பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு திமுக சார்பில் அக்கட்சியின் பேரூர் செயலாளர் ஜோதிகுமார் உட்பட 7 பேர்மனு தாக்கல் செய்திருந்தனர்‌. வேட்புமனு பரிசீலனையின்போது சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த தியாகராஜன், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் மனுக்கள் மீது திமுக வேட்பாளர் ஜோதிகுமார் ஆட்சேபனை தெரிவித்தார்.மனு தாக்கல் செய்த தியாகராஜன், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளதாகவும், சட்டப்படி தேர்தலில் போட்டியிடும் ஒருவர் ஒரே இடத்தில் மட்டுமே வாக்குரிமை வைத்திருக்க வேண்டும்.  தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு எதிராக இரண்டு மாநிலங்களில்  வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள தியாகராஜன், சங்கீதா ஆகியோரின் வேட்புமனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று ஆதாரங்கள் வழங்கினார். புகார் மீது தேர்தல் நடத்தும் அலுவலர் உரிய ஆவணங்களை சரி பார்த்து அவர் இரண்டு மாநிலங்களில் வாக்காளராக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு  கணவன், மனைவி வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார்.வயது குறைவால் மற்றொரு வேட்பாளர் மனு தள்ளுபடி: பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் 74 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின்மீது பரிசீலனை தேர்தல் நடத்தும் அலுவலர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் 11வது வார்டு திமுக சார்பில் மனு தாக்கல் செய்த சசிகலா சத்யாவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் சசிகலாவுக்கு தேர்தலில் போட்டியிட நிர்ணயிக்கப்பட்ட வயதை  விட குறைவாக இருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மற்ற அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டன….

The post ஆந்திர வாக்காளர் பட்டியலிலும் பெயர் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் தம்பதி வேட்புமனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: