×

ஆந்திராவில் குடிகாரர்கள் ஓட்டுக்கு குறி வைக்கிறது பாஜ: ரூ.50க்கு சரக்கு தருவதாக ஆசை வார்த்தை

அமராவதி: ‘ஆந்திராவில் ‘குடிமக்கள்’ அனைவரும் பாஜ.விற்கு வாக்களித்தால், ரூ.50.க்கு மதுபானம் தருவோம்,’ என்று இம்மாநில பாஜ தலைவர் சோமு வீரராஜூ தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், அமராவதியில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் சோமு வீரராஜூ பேசியதாவது: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி ஆகியவை, ஆந்திராவில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தும், நீண்ட கடற்பகுதி இருந்தும் மாநிலத்தை மேம்படுத்தாமல் தோல்வி அடைந்துள்ளன. நமது மாநிலத்தில் ஒரு கோடி பேர் மது அருந்துகிறார்கள். நீங்கள் அனைவரும் 2024ம் ஆண்டு தேர்தலில் பாஜ.விற்கு வாக்களியுங்கள். பாஜ ஆட்சிக்கு வந்தால் மிக குறைந்த விலையில் ரூ.75.க்கு மதுவை வழங்குவோம். அரசுக்கு அதிக வருமானம் கிடைத்தால், அடுத்தக்கட்டமாக உங்களுக்கு ரூ.50.க்கே மதுபாட்டில் விற்பனை செய்யப்படும். அதுவும் மோசமானது அல்ல; தரமான சரக்கே உங்களுக்கு வழங்கப்படும். சராசரியாக ஒரு நபர் ஒரு மாதத்துக்கு ரூ.12 ஆயிரத்துக்கு மது அருந்துகிறார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இந்த பணம்  அனைத்தையும், வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் சுரண்டி விடுகிறார். ஆந்திராவில் பாஜ ஆட்சிக்கு வந்தால், மூன்றே ஆண்டுகளில் மாநிலம் வளர்ச்சி பெறும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது….

The post ஆந்திராவில் குடிகாரர்கள் ஓட்டுக்கு குறி வைக்கிறது பாஜ: ரூ.50க்கு சரக்கு தருவதாக ஆசை வார்த்தை appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,BJP ,Somu Veeraraju ,
× RELATED ஆந்திராவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!!