×

4 மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லை; ஜூசில் விஷம் கலந்து கொடுத்து பாடகி கொலை?.. ஒடிசாவில் சோகம்


புவனேஸ்வர்: பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ, புவனேஸ்வரில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவருக்கு ஜூசில் விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ (27), கடந்த 15 நாட்களுக்கு முன் போலங்கிரில் நடந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு ஜூஸ் வழங்கப்பட்டது. அதனை குடித்த பின்னர் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பவானிபட்னாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதற்கட்ட சிகிச்சைக்குப் பிறகு, அவர் போலங்கிரில் உள்ள பீமா போய் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார், பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் பர்கரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாததால் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், பாடகி ருக்ஸானா பானோ சிகிச்சை பலனின்றி இறந்தார். ஆனால் அவரது மரணத்திற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

இதுகுறித்து ருக்ஸானா பானோவின் சகோதரி ரூபி பானோ கூறுகையில், ‘மேற்கு ஒடிசாவைச் சேர்ந்த பாடகரால், எனது சகோதரி ருக்ஸானா பானோவுக்கு அவ்வப்போது மிரட்டல்கள் வந்தன. ஷூட்டிங்கில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஜூசில் விஷம் கலந்து கொடுத்திருக்க வாய்ப்புள்ளது. அதனால் 4 மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும் என் சகோதரியை காப்பாற்ற முடியவில்லை. அவரது மர்ம சாவு குறித்து போலீசாரும் விசாரித்து வருகின்றனர்’ என்றார். பிரபல சம்பல்புரி பாடகி ருக்ஸானா பானோ மர்மமான முறையில் இறந்த சம்பவம் ஒடிசாவில் சோ கத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post 4 மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பலனில்லை; ஜூசில் விஷம் கலந்து கொடுத்து பாடகி கொலை?.. ஒடிசாவில் சோகம் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Bhubaneswar ,Ruksana Bano ,Jusil ,
× RELATED என் அம்மா உயிருடன் இருந்தவரை என்...