×

ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம்

டெல்லி: ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்க்கப்படும் நிலையில், அதில் தமிழ் முன்னிலை வகிப்பதாக தலைமை நீதிபதி பெருமிதத்துடன் கூறினார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், வழக்கு ஒன்றின் விசாரணையின் போது கூறுகையில், ‘நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, முதன்முதலாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள், அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் சுமார் 37 ஆயிரம் தீர்ப்புகள் ஆங்கிலத்தில் இருந்து இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

தற்போது பிற மாநில மொழிகளில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. குறிப்பாக தமிழில் மொழிப் பெயர்க்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, போடோ, டோக்ரி உள்ளிட்ட 22 மொழிகள் அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற விசாரணையின் போது ‘மின்னணு உச்ச நீதிமன்ற அறிக்கை’ (இ-எஸ்சிஆர்) மூலம் பெறப்படும் தீர்ப்புகளின் மேற்கோள்களை வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும். அவை வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு ஆதரவாக இருக்கும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இப்போது செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப உதவியுடன் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. இ-எஸ்சிஆர் எனப்படும் உச்ச நீதிமன்றத்தின் டிஜிட்டல் பதிப்பு மக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும், நீதித்துறையில் பணியாற்றுபவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

The post ஏஐ தொழில்நுட்ப வசதிகளுடன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் மொழிப்பெயர்ப்பில் ‘தமிழ்’ முன்னிலை: தலைமை நீதிபதி பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Chief Justice ,D. Y. Chandrasuet ,Proumitam ,
× RELATED கனிம வளங்களுக்கு வரி விதிக்க மாநில...