×

குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நாளை அமெரிக்கா பயணம்: 23ம் தேதி ஐ.நா-வில் உரை

டெல்லி: குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை அமெரிக்கா பயணம் மேற்கொள்ளும் நிலையில் 23ம் தேதி ஐ.நா-வில் உரையாற்றுகிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து ‘குவாட்’ என்ற அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு அமெரிக்காவின் டெலவர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடியும் பங்கேற்க உள்ளதால், அவர் நாளை அமெரிக்கா செல்கிறார். இந்த குவாட் உச்சி மாநாட்டில் ரஷ்யா-உக்ரைன் மோதல், மேற்கு ஆசியா பதற்றம் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய நிலவரம் உள்ளிட்ட சர்வதேச சவால்கள் குறித்து தலைவர்கள் விரிவாக விவாதிக்க உள்ளனர்.
மாநாட்டுக்கு இடையே தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட சந்திப்புகளும் நடைபெறுகின்றன. ெதாடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதிக்கின்றனர். குவாட் மாநாட்டை தொடர்ந்து நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் நடைபெறும் எதிர்காலத்துக்கான உச்சிமாநாட்டில் 23ம் தேதி பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மூன்று நாள் அரசு முறை பயணத்தை முடித்துக்கு கொண்டு பிரதமர் மோடி வரும் 24ம் தேதி நாடு திரும்புகிறார்.

The post குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க மோடி நாளை அமெரிக்கா பயணம்: 23ம் தேதி ஐ.நா-வில் உரை appeared first on Dinakaran.

Tags : Modi ,United States ,Quad Summit ,Delhi ,PM Modi ,India ,Australia ,Japan ,QUAD ,23rd ,Dinakaran ,
× RELATED அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு மோடி டெல்லி புறப்பட்டார்!