திருப்பூர், ஜூன்28: திருப்பூர் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றதிலிருந்து மனிஷ் நாராயணரே பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு திருப்பூர் ராயபுரம் ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் மனிஷ் நாராயணவரே ஆய்வு மேற்கொண்டார்.அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகிற உணவு குறித்தும்,விடுதியில் உள்ள வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் மாணவர்களிடம் ஏதேனும் தேவைகள் உள்ளதா? குறைகள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின்போது மாவட்ட வருவாய் அதிகாரி கார்த்திகேயன், ஆதிதிராவிடர் நல அலுவலர் புஷ்பா தேவி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
The post ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.
