தேனி: தேனி அருகே பழனிசெட்டிபட்டி அதிமுக தேர்தல் அலுவலகத்தில், பாஜ மாவட்ட செயலாளரை அரிவாளால் வெட்ட முயன்ற அதிமுக நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், போடி தொகுதி அதிமுக வேட்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அதிமுகவினரும், பாஜவினரும் வாக்கு சேகரித்து வருகின்றனர். போடி தொகுதிக்குட்பட்ட தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் அதிமுக தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, கடந்த 1ம் தேதி இரவு பாஜ மாவட்ட செயலாளர் மனோகரன் தலைமையில், மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்ற கூட்டத்திற்கு ஆட்களை அழைத்துச் செல்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
தேனி அருகே தேர்தல் அலுவலகத்தில் பாஜ மாவட்ட செயலாளரை வெட்ட முயன்ற அதிமுக நிர்வாகி: வீடியோ வைரல்
