அரவக்குறிச்சி பகுதியில் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

அரவக்குறிச்சி, ஆக. 27: அரவக்குறிச்சி பகுதியில் கிலோ ரூ.100க்கு விற்ற தக்காளி, வரத்து அதிகம் காரணமாக கிலோ ரூ.30க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக தக்காளி விலை எகிறி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டது. இதனால் சாம்பார், சட்னி உள்ளிட்ட பல்வேறு வகையான சமையலுக்கு சுவை கூட்டக்கூடிய தக்காளியை போதுமான அளவு பயன்படுத்த முடியவில்லை. இதனால் அன்றாடம் ஏற்படும் கூடுதல் செலவுகளை சமாளிக்க முடியாமல் இல்லத்தரசிகள் திணறினர். அரவக்குறிச்சி, பள்ளபட்டி பகுதியில் 100க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் உள்ளன.

கடைகளுக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டிலிருந்து தக்காளி உள்ளிட்ட பல்வேறு வகையான காய்கறிகள் வாங்கி வந்து சில்லறையில் விற்கப்படுகின்றது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தக்காளி விலை எகிறி ஐந்து மடங்கு விலை அதிகரித்து கிலோ ரூ.100க்கும் மேல் விற்பனையகியது. ஆனால், தற்போது வரத்து அதிகம் காரணமாக அரவக்குறிச்சி பகுதியில் தக்காளி கிலோ ரூ.30க்கு சில்லரை வியாபாரிகள் விற்கின்றனர். இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுதொடர்பாக காய்கறி சில்லறை வியாபாரி ஒருவர் கூறியதாவது: திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள காய்கறி மொத்த மார்க்கெட்டிலிருந்து வாங்கி வந்து சில்லறையில் விற்கப்படுகின்றது. திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் கிராமப் பகுதியிலும் தக்காளி அதிக விளைச்சலினாலும் வரத்து அதிகரித்து விலை குறைந்துள்ளது. அரவக்குறிச்சி பகுதியில் கிலோ ரூ.150 வரை விற்ற தக்காளி வரத்து அதிகம் காரணமாக ஒரு கிலோ ரூ.30க்கும், நான்கு கிலோவாக வாங்கினால் ரூ.100க்கும் விற்கப்படுகின்றது. இதனால் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

The post அரவக்குறிச்சி பகுதியில் சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.30க்கு விற்பனை: இல்லத்தரசிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: