அமெரிக்காவின் ஹவாய் தீவில் மீண்டும் வெடிக்கும் எரிமலை: நெருப்பு குழம்பு வெளியேறுகிறது

அமெரிக்கா: அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாயூயா எரிமலை மீண்டும் வெடிக்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெடித்து சிதறிய கிலாயூயா எரிமலையால் சுமார் 165 அடி உயரத்திற்கு லாவா சிதறல்கள் தூக்கிவீசப்பட்டன. இதனால் அப்பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் அந்த எரிமலை மீண்டும் நெருப்பு குழம்புகளை கக்கத் தொடங்கியுள்ளது. செந்நிறத்தில் வெளியேறும் லாவா குழம்புகள் ஆறாக ஓடுவதால் அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. எரிமலையின் சீற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன் அருகில் வசிப்பவர்களை வெளியேற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.   …

The post அமெரிக்காவின் ஹவாய் தீவில் மீண்டும் வெடிக்கும் எரிமலை: நெருப்பு குழம்பு வெளியேறுகிறது appeared first on Dinakaran.

Related Stories: