அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் மஸ்தான் பெருமிதம்

செஞ்சி : விழுப்புரம் மாவட்டம் வல்லம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் செஞ்சி, வல்லம், மேல்மலையனூர் ஒன்றியத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர்கள் வல்லம் அமுதா ரவிக்குமார், செஞ்சி விஜயகுமார், மேல்மலையனூர் கண்மணி நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தான் கலந்து கொண்டு செஞ்சி, மேல்மலையனூர், வல்லம் ஒன்றியங்களை சேர்ந்த 460 பயனாளிகளுக்கு 3 கோடியே 29 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கினார்.அப்போது அமைச்சர் பேசுகையில், பெண்கள் மீது அக்கறையுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த ஆட்சி காலத்தில் 3 ஆண்டு காலமாக நிலுவையில் இருந்த தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அதன்படி இந்தாண்டு 94 ஆயிரத்து 700 பேருக்கு 762 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், விழுப்புரம் மாவட்டத்தில் 2,403 பேரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர் என அமைச்சர் மஸ்தான் கூறினார்.இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயசந்திரன், துணைசேர்மன் ஷீலா தேவி சேரன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, மொடையூர் துரை, நெடுஞ்செழியன், சுப்பரமணியன், மாவட்ட கவுன்சிலர்கள் அன்புசெழியன், சசிகலா மோகனசுந்தரம், ஒன்றிய பொருளாளர் தமிழரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post அதிமுக ஆட்சியில் 3 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்-அமைச்சர் மஸ்தான் பெருமிதம் appeared first on Dinakaran.

Related Stories: