அடிப்படை வசதி மேம்படுத்துவது தொடர்பான 87 தீர்மானங்கள்

 

காங்கயம், ஜூலை 20: காங்கயம் நகராட்சி கூட்டரங்கில் நகர்மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையாளர் கனிராஜ், நகர்மன்ற துணை தலைவர் கமலவேணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் குடிநீர் குழாய்கள் பராமரித்தல், சாலை பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான 87 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் சேகரமாகும் குப்பைகளை அப்புறப்படுத்துவதில் சுகாதார பணியாளர்கள் மெத்தனமாக உள்ளதாக புகார் தெரிவித்தனர். மேலும் நகரப்பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து இருப்பதாகவும், கால்நடைகள், குழந்தைகளை கடிப்பதாகவும், இதனை கட்டுப்பபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்மன்ற தலைவர் உறுதியளித்தார். இதில் நகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

The post அடிப்படை வசதி மேம்படுத்துவது தொடர்பான 87 தீர்மானங்கள் appeared first on Dinakaran.

Related Stories: