×

மீனம்

16.4.2026 முதல் 22.4.2026 வரை

சாதகங்கள்: சுமைதாங்கியாய் இருந்து மற்றவர்களின் மன சுமைகளை பொறுமையுடன் கேட்டு ஆறுதலைச் சொல்வீர்கள். அதுவே உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்கும். கஷ்டங்களைக் குறைக்கும். இப்பொழுது உள்ள கிரக நிலைகளுக்கு இது நல்ல பரிகாரமாகவும் இருக்கும். இரண்டாம் இடத்தில் சூரியன், சுக்கிரன் இருப்பதால் குடும்பம் மற்றும் வருமானத்தில் கவனம் அதிகரிக்கும். நான்காம் இடத்தில் குரு இருப்பது வீடு, வாகனம் மற்றும் மன அமைதியைத் தரும். தன குடும்பஸ்தானத்தில் சுக்கிரனும் இருப்பது பொருளாதார ரீதியாக நற்பலன்களைத் தரும்.

கவனம் தேவை: ராசியில் செவ்வாய், சனி, புதன் இருப்பதால் மனஅழுத்தம், குழப்பம், உடல் சோர்வு போன்றவை ஏற்படலாம். ஆறாம் இடத்தில் கேது இருப்பதால் சில நேரங்களில் உடல்நலப் பிரச்னைகள் தோன்றலாம். பன்னிரண்டாம் இடத்தில் ராகு இருப்பது வெளிநாடு தொடர்பான வாய்ப்புகள் மற்றும் செலவுகளை அதிகரிக்கும். கண்களையும் சருமத்தையும் பாதுகாத்துக் கொள்ளவும்.

பரிகாரம்: தியானம் மற்றும் விஷ்ணு வழிபாடு மிக முக்கியம்.

 

 

 

Tags :
× RELATED கும்பம்