9.4.2026 முதல் 15.4.2026 வரை
சாதகங்கள்: ஆறாம் இடத்தில் ராகு இருப்பதால் எதிரிகளை வெல்வதற்கான சக்தி கிடைக்கும். பத்தாம் இடத்தில் குரு இருப்பது நல்ல தொழில் முன்னேற்றத்தையும் உயர்ந்த நிலையை அடையும் வாய்ப்பையும் தரும். ஏழாம் இடத்தில் புதன் இருப்பதால் வியாபார அறிவு வளரும். புதுப்புது யுக்திகளைக் கையாண்டு வணிகத்தில் வெற்றி பெறுவீர்கள் நல்ல லாபம் உண்டு. புதன் மீனத்தில் அமர்ந்து ராசியைப் பார்க்கின்றார். கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற புதன் நீசம் பெறுவதும், சூரியனோடு இணைந்து ராசியைப் பார்ப்பதும் சிறப்பான பலனைத் தரும். வீடு கட்டும் பணியில் இருந்த சிரமங்கள் குறையும். கணவன் மனைவி உறவுகளில் உள்ள கசப்புகள் மறையும்.
கவனம் தேவை: ஏழாம் இடத்தில் சனி இருப்பதால், திருமணத்தில் தாமதம் அல்லது சிரமம் ஏற்படலாம். வழக்குகள் பிரச்னை சிரமத்தைத் தரும். பன்னிரண்டாம் இடத்தில் கேது இருப்பதால், மனஅழுத்தம் மற்றும் தனிமை உணர்வு தோன்றும். வெளியூர் பயணங்களின் போது பொருள்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். அதிக அலைச்சல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. கணவன் அல்லது மனைவி ஆரோக்கியத்தில் சிற்சில இடையூறுகள் ஏற்படும். பற்களிலும் கண்களிலும் பிரச்னை ஏற்படுவதற்கும் சந்தர்ப்பங்கள் உண்டு.
பரிகாரம்: கோயிலுக்குச் சென்று ஒரு அகல் விளக்கு ஏற்றி வாருங்கள். அனைத்து கஷ்டங்களையும் அது தீர்க்கும்.
