9.4.2026 முதல் 15.4.2026 வரை
சாதகங்கள்: மூன்றாம் இடத்தில் சனி, செவ்வாய், புதன், சூரியன் ஆகியவை இருப்பது மிகுந்த முயற்சி, தைரியம் மற்றும் உழைப்பைக் காட்டுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு எதிலும் தீவிரமாக ஈடுபடுவீர்கள். ஒரு உற்சாகம் இருக்கும். நோக்கம் இருக்கும். வெற்றி பெற வேண்டும் என்கிற ஆர்வம் அதிகரித்து இருக்கும். அரசாங்க வேலை வாய்ப்புக்காக முயற்சி செய்பவர்களுக்கு, வெற்றி வாய்ப்பு அதிகம். வேலை தேடுபவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். நான்காம் இடத்தில் சுக்கிரன் இருப்பதால், வசதி மற்றும் ஆடம்பர வசதிக்கான பொருட்களை வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். ஆறாம் இடத்தில் குரு இருப்பதால், எதிரிகளை சமாளிக்கும் திறன் இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் நல்ல விருத்தி இருக்கும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள்.
கவனம் தேவை: இரண்டாம் இடத்தில் ராகு இருப்பதால், பேச்சில் வித்தியாசம் மற்றும் வருமானத்தில் ஏற்றத் தாழ்வு இருக்கும். எட்டாம் இடத்தில் கேது இருப்பதால், திடீர் மாற்றங்கள் மற்றும் ஆன்மிக சிந்தனை அதிகரிக்கும். பாக்யாதிபதியான புதன் நீசம் பெறுவதால், சில நேரங்களில் கிடைப்பது போல் இருந்து கைகழுவிப் போகலாம் எச்சரிக்கை தேவை. நெருங்கிய உறவினர்கள் இடையே பரஸ்பர ஒற்றுமை குறையும்.
பரிகாரம்: ராகுகாலத்தில் துர்க்கையை வணங்குங்கள்.
