(1.8.2026 முதல் 7.8.2026 வரை)
சாதகங்கள்: பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் செவ்வாய் இருப்பதால் சகோதர உதவிகள் கிடைக்கும் மேலதிகாரிகள் உங்களுக்குரிய அங்கீகாரத்தைத் தருவார்கள். வெளிநாட்டில் வேலை செய்ய நினைப் பவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். ராசிக்கு ஆறில் சூரியன் இருப்பதால், வேலைவாய்ப்பில் முன்னேற்றம் உண்டு. எதிரிகளை வெல்லும் திறன் அதிகரிக்கும். கடன்களை அடைக்க வாய்ப்பு. ஏற்படும் 3 ம் அதிபதி செவ்வாய் 5ல் இருப்பதால் கல்வி மற்றும் கலைத் துறையில் முன்னேற்றம் உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். படைப்புத் திறன் வெளிப்படும். ராகு ராசி யில் இருப்பதால் புதிய சிந்தனைகள் உருவாகும். தொழில்நுட்பம் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும்.
கவனம்தேவை: ராகுவின் தாக்கத்தால் குழப்பமான முடிவுகளைத் தவிர்க்கவும். காதல் விஷயங்களில் பொறுமை அவசியம்.
வணிகங்களில் எச்சரிக்கை தேவை. உணர்ச்சி வசப்படுவதைத் தவிர்க்க வேண்டும். உடல்நலத்தில் அலட்சியம் வேண்டாம். அலுவலகம் மற்றும் தொழிலில் வேலைப்பளு அதிகரிக்கும். உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். உடனடி லாபம் தரும் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.
பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
