×

சிம்மம்

(1.8.2026 முதல் 7.8.2026 வரை)

சாதகங்கள்: செவ்வாய் லாபத்தில் இருப்பதால் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சகோதர உதவி உண்டு. ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வெளிநாட்டு தொடர்புகளில் நன்மை கிடைக்கும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வுகிடைக்கும். கேது-சுக்கிரன் இணைவு ஆன்மிக சிந்தனையையும் கலைத் திறமையையும் வளர்க்கும். புதிய அனுபவங்கள் கிடைக்கும். குடும்பத்தில் பழைய பிரச்னைகள் படிப்படியாக குறையும். நண்பர்களின் ஆதரவால் சில காரியங்கள் நிறைவேறும். வெளிநாட்டு வாய்ப்புகள் உருவாகலாம்.

கவனம்தேவை: எந்த முதலீடுகளிலும் அவசரம் வேண்டாம். நண்பர்களிடம் பணப் பரிவர்த்தனையில் கவனம். தேவை உடல்நலத்தில் அலட்சியம் வேண் டாம். செலவுகள் அதிகரிக்கும். தூக்கமின்மை ஏற்படலாம். மறைமுக எதிரிகளிடம் கவனம் தேவை. தோல் மற்றும் கண் தொடர்பான சிறிய பாதிப்புகளை கவனிக்கவும். கேது இருப்பதால் அவசர முடிவுகளைத் தவிர்க்க வேண்டும். மனதில் தேவையற்ற குழப்பம் வரலாம். ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள்.

சந்திராஷ்டமம் : 2.8.2026 பிற்பகல் 3.27 முதல் 4.8.2026 இரவு 9.54 வரை சந்திராஷ்டமம் உண்டு.

பரிகாரம்: தாயார் சந்நதியில் நெய்தீபம் ஏற்றுங்கள்.

 

 

 

 

 

 

 

 

Tags : Leo ,
× RELATED மீனம்