×

திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் : நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கம்

 

சென்னை: திருச்சி கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்; திருச்சி கிழக்கில் நான் நிற்பது தர்மமே இல்லை. அக்கட்சிக்காக உழைத்தவர்கள் நிற்க வேண்டும். அதற்காக நான் அரசியலுக்கு வரப் போவதே இல்லை என கிடையாது. அவசரப்பட வேண்டாம், பொறுமையாக அடியெடுத்து வைப்போம். எங்கு நமக்கு நல்ல மரியாதை கிடைக்கும், யாருடன் சேர்ந்தால் மக்களுக்கு நல்லது நடக்கும் என்றெல்லாம் யோசித்து முடிவெடுப்பேன்.

இவ்வளவு நாள் உழைத்து, காப்பாற்றி வைத்த பெயரை எல்லாம் ஒருவரிடம் சரண்டர் செய்து அவருக்காக உழைக்கப் போகிறோம் என்றால். அங்கு சீட், பொறுப்பு கிடைப்பதை விட மரியாதைதான் முக்கியம். எடுத்துக்காட்டிற்காக நாயை குறிப்பிட்டு பேசியதை சர்ச்சையாக்கி விட்டார்கள். அரசியலுக்கு வர மக்களிடம் ஏன் கேட்க வேண்டுமென சிலர் பேசுகின்றனர். என்னை வாழவைத்தவர்கள் என்பதால் அரசியலுக்கு வருவது குறித்து மக்களின் கருத்தைக் கேட்டேன் என்று கூறினார்.

Tags : Trichy East ,Ragawa Lawrence ,Chennai ,Church East ,
× RELATED ஆவின் பால் விநியோகக் குறைப்பை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்: இந்திய கம்யூ.