×

முதல் டி.20 போட்டியில் இந்தியா-அயர்லாந்து நாளை மோதல்

 

பெல்ஃபாஸ்ட்: ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி.20 போட்டிகளில் ஆடுகிறது. இதில் முதல் போட்டி இந்திய நேரப்படி நாளை மாலை 6 மணிக்கு பெல்ஃபாஸ்ட் மைதானத்தில் தொடங்கி நடக்கிறது. உலக கோப்பைக்குபின்னர் இந்தியா , புதிய கேப்டனுடன் முதல்போட்டியில் ஆட உள்ளது. துணை கேப்டன் திலக்வர்மா, சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான்கிஷன், ஆல்ரவுண்டர்கள் ஷிவம் துபே, அக்சர் பட்டேல் பேட்டிங்கில் வலு சேர்ப்பர்.

பவுலிங்கில் அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ரானா, பிரசித் கிருஷ்ணா, சுழலில் ரவி பிஷ்னோய் இடம்பெறக்கடும். 15 வயது இளம்புயல் சூர்யவன்ஷிக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மறுபுறம் அயர்லாந்து அணி புது கேப்டன் லோர்கன் டக்கருடன் களம் இறங்குகிறது. இரு அணிகளும் இதற்கு முன் 8 முறை டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் அனைத்திலும் இந்தியா தான் வென்றுள்ளது.

Tags : India ,Ireland ,T20 ,Belfast ,Shreyas Iyer ,2T20 ,Belfast Stadium ,World Cup ,
× RELATED 65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான...