×

மகளிர் உலக கோப்பை டி20 தொடர் இந்தியா அபார பந்துவீச்சு ரன் குவிக்க வங்கதேசம் திணறல்

மான்செஸ்டர்: ஐசிசி மகளிர் உலக கோப்பை டி20 தொடரின் முதல் பிரிவு லீக் ஆட்டத்தில், இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன் மட்டுமே எடுத்தது. ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் நிகர் சுல்தானா பேட்டிங்கை தேர்வு செய்தார். திலாரா அக்தர், ஜுவைரியா பிர்தூஸ் இணைந்து வங்கதேச இன்னிங்சை தொடங்கினர்.

திலாரா 4 ரன்னில் வெளியேற ஜுவைரியா 33 ரன் (31 பந்து, 5 பவுண்டரி) எடுத்து அவுட்டானார். ஓரளவு தாக்குப்பிடித்த சோபனா மோஸ்தாரி 22 ரன், கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன் எடுக்க, அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகோடுத்து அணிவகுத்தனர். ஷர்மின் அக்தர் 10 ரன் எடுத்து காயத்தால் வெளியேறினார். ஷோர்னா 13 ரன் எடுத்தார்.

வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன் சேர்த்தது. ரபியா கான், மருபா அக்தர் தலா 2 ரன்ஞுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் கடைசி 16 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய பந்துவீச்சில் இடது கை லெக் ஸ்பின்னர் ராதா யாதவ் 4 ஓவரில் 28 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். ஸ்ரீசரணி 2, ரேணுகா சிங், நந்தனி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 137 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்கியது.

Tags : Women's World Cup T20 series ,Bangladesh ,India ,Manchester ,ICC Women's World Cup T20 ,Old Trafford… ,
× RELATED 65-வது தேசிய மாநிலங்களுக்கு இடையிலான...