போபால்: மத்திய பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில் சாலை விபத்தில் காயமடைந்தவரை ஏற்றி வந்த ஆம்புலன்ஸை அவரின் மனைவி மூலம் சுத்தம் செய்ய வைத்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம்புலன்ஸில் ரத்தம் சிந்தியதால் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நோயாளியின் மனைவியை வண்டியை சுத்தம் செய்யச் சொன்னதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலான நிலையில், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
