திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 68,980 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 26,511 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள், கோயில் உண்டியலில் ரூ.4.09 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 31 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 16 மணி நேரம் ஆகிறது. ரூ.300 டிக்ெகட் பக்தர்கள் 3 மணி நேரத்திலும், நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 6 மணி நேரத்திலும் தரிசனம் செய்தனர்.
