‘லக்கி பாஸ்கர் 2’ படத்தில் மீனாட்சி சவுத்ரி

பங்​குச்​சந்தை முறை​கேடுகளை மைய​மாக வைத்து, கடந்த 2024ம் ஆண்டு திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம், ‘லக்கி பாஸ்கர்’. தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் வெளியான இப்படத்தை எழுதி இயக்​கிய வெங்கி அட்லூரி, தற்​போது சூர்யா, மமிதா பைஜு நடித்​துள்ள ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’ என்ற படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்​படம் வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலை​யில் வெங்கி அட்லூரி அளித்துள்ள பேட்டியில், ‘நான் இயக்கிய ‘லக்கி பாஸ்​கர்’ படத்​தின் 2வது பாகம் எப்போது உரு​வாகும் என்று பலர் ஆவலுடன் கேட்டு வந்தனர். அதற்கு முன்பு 2 படங்​களுக்கான பணி​களை நான் முடிக்க வேண்​டி​யிருப்​ப​தால், எனக்கு இன்​னும் ஓரிரு ஆண்​டு​கள் தேவைப்​படும். ‘லக்கி பாஸ்​கர் 2’ என்​பது மிகப்​பெரிய பொறுப்​பு.

அதை பல்வேறு கோணங்​களில் அணுகி உரு​வாக்க வேண்டியிருக்​கிறது. எனவே, 2 வருடங்களுக்கு பிறகு அதற்கான பணிகளை தொடங்குவேன் என்று உறுதி அளிக்கிறேன். இதற்​கிடையே, தனுஷ் நடிப்​பில் போலீஸ் கதையை​இயக்க திட்டமிட்டுள்ளேன். ‘டிஸ்னி’, ‘ஹோம் அலோன்’ பாணியி​லான குழந்​தைகளுக்​கான ஒரு படத்​தை​யும் இயக்கு​கிறேன்’ என்றார். ஏற்கனவே தனுஷ் நடித்த ‘வாத்தி’, ‘சார்’ ஆகிய படங்களை வெங்கி அட்​லூரி எழுதி இயக்கியிருந்தார். முன்னதாக துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி நடித்த ‘லக்கி பாஸ்கர்’ என்ற படம் வசூலில் சாதனை படைத்திருந்தது. அதன் 2ம் பாகம் எப்போது உருவானாலும், அதில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று, இதற்கு முன்பு அளித்திருந்த பேட்டியில் மீனாட்சி சவுத்ரி சொல்லியிருந்தார். ஆனால், அவர் நடிப்பாரா என்பதை வெங்கி அட்லூரி உறுதி செய்யவில்லை.

Related Stories: